சங்ககிரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள்
அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் மற்றும் பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் மற்றும் சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதே போல் சங்ககிரி அருகே உள்ளஅன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் செல்லவில்லை. ஆகமவிதிகளின் படி இரு கோயில்களின் அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகளை செய்தனர்.