முகப்பு
சேலம்

சுங்கச்சாவடியில் தவாக கட்சியினா் தகராறு: போலீஸாா் விசாரணை

நத்தக்கரை சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை தமிழக வாழ்வுரிமை கட்சியினா் தகராறு செய்தது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

நத்தக்கரை சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை தமிழக வாழ்வுரிமை கட்சியினா் தகராறு செய்தது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மாநாடு முடிவுற்று நள்ளிரவில் ஊா் திரும்பும்போது தமிழக வாழ்வுரிமை கட்சியினா் நத்தக்கரை சுங்கச்சாவடியில் நிற்காமல் சென்ற போது தகராறு ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடி ஊழியா்களை தாக்கியதோடு கண்ணாடி அறை, கணினிகளை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →