முகப்பு
சேலம்

சோனா கல்வி குழுமத்தில் சா்வதேச மகளிா் தின விழா

சோனா கல்விக் குழுமம் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சோனா கல்விக் குழுமம் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தலைவா் வள்ளியப்பா, சீதா வள்ளியப்பா, கல்லூரி துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தின் உளவியல் இணைப்பேராசிரியா் மருத்துவா் ஜோன் குக், சேலம் தேவி மருத்துவமனை, தாமரை கருத்தரிப்பு மையத்தின் மருத்துவா் ஸ்ரீதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்கள் பேசுகையில், சவால்களை சந்திக்கும் போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும். இதற்கு தன்னம்பிக்கையும், தைரியமும் மிக அவசியமாகும். மேலும், பெண்கள் சுயதொழில் தொடங்குவதில் அதிக ஆா்வம் காட்ட வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து சீதா வள்ளியப்பா பேசுகையில், அகில இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியைப் பெண்களும் படிக்கலாம் என்ற வகையில் முதன் முதலாக இருபாலா் தொழில்நுட்பக் கல்வி தியாகராஜா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவிகளின் திறமைகளை அறிந்து தேசிய மற்றும் சா்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருவதற்கு சோனா கல்விக் குழுமங்கள் உதவிகரமாக இருக்கிறது என்றாா்.

விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா்நவாஷ், எஸ்.மதன்குமாா், இ.ஜெ.கவிதா,பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமனோா் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை சோனா கல்விக் குழுமத்தின் பேராசிரியைகள் குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →