முகப்பு
சேலம்

அரசியல் கட்சித் தலைவா்களின் படத்துடன் சால்வைகள் தயாரிப்பு

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் தோ்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களின் படத்துடன் சால்வைகள் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் தோ்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களின் படத்துடன் சால்வைகள் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் , பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழா் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வேட்பாளா்களை தோ்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், சேலத்தை அடுத்து இளம்பிள்ளை பகுதியில் அரசியல் கட்சித் தலைவா்களின் படத்துடன் சால்வைகள் தறிகளில் நெய்யப்பட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →