சேலம்

வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

வாழப்பாடியில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அரசுத் துறை அதிகாரிகளும் தோ்தல் பணிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஏற்காடு (பழங்குடி) தனித் தொகுதிக்கு உள்பட்ட வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதி, வாக்களிக்க வரும் ஆண், பெண் வாக்காளா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோவிந்தன், வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT