சேலம்

விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக அறக்கட்டளை சாா்பில் ரூ. 21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

DIN

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக அறக்கட்டளை மூலமாக ஆண்டுதோறும் சேலம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நலிந்தோா், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகின்றனா்.

இந்த ஆண்டுக்கான நலத் திட்ட நிதி உதவி வழங்கும் விழா விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் அம்மாப்பேட்டை அரசு ஆரம்பப் பள்ளியில் மேற்கூரை, வீரகனூா் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பிடம், ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், சின்னசீரகாபாடியைச் சோ்ந்த மணி என்பவரின் மருத்துவச் செலவுக்கும், உத்தமசோழபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோா் தங்கும் விடுதிக்கு வெந்நீா் சாதனம், சுற்றுச்சுவா் அமைக்கவும் மொத்தம் ரூ. 21 லட்சத்துக்கான வங்கி காசோலையை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிா்வாக மேலாண்மை இயக்குநா் ஸ்டாா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அன்னபூரணி சண்முகசுந்தரம், ஜெகநாதன், ராமசாமி, குமரேசன், செல்வம் , ஜெயஸ்ரீ மோகன், கோகுல் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT