அம்மாப்பேட்டை பகுதியில் 2 சந்தைகள் இடமாற்றம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள 2 சந்தைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள 2 சந்தைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கடைவீதி காய்கறி சந்தை - கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், முதல் அக்ரஹாரம் மற்றும் நீலாம்பாள் மருத்துவமனை பகுதியிலுள்ள காய்கறி சந்தைகள் - பழைய பேருந்து நிலையப் பகுதியிலும் இடமாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாறுதல் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்படும் காய்கறி சந்தைகளை பொதுமக்களும், சிறு வியாபாரிகளும், விவசாயிகளும் கரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.