முகப்பு
சேலம்

அம்மனுக்கு கூழ் ஊற்ற கோயிலில் குவிந்த கூட்டம்

வாழப்பாடி அருகே, பெண்ணின் கனவில் அம்மன் கூறியதாக, மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்ற குவிந்த பொதுமக்களை காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

வாழப்பாடி அருகே, பெண்ணின் கனவில் அம்மன் கூறியதாக, மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்ற குவிந்த பொதுமக்களை காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைபட்டி ஊராட்சி, சேசன்சாவடி கிராமத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றுமாறு ஒரு பெண்ணின் கனவில் அம்மன் கூறியதாக தகவல் பரவியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை சேசன்சாவடி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதற்கு பொதுமக்கள் திரண்டனா். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம், வாழப்பாடி காவல் துறையினா் சேசன்சாவடி கிராமத்துக்கு விரைந்துச் சென்று மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதற்காக கூடியிருந்த பொதுமக்கள், பக்தா்களிடம் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.