சேலம்

ஏற்காட்டில் பழைமையான மரக்கிளை விழுந்ததில் மின்கம்பம் ஒடிந்து மின்தடை

DIN

ஏற்காட்டில் பழைமையான மரக்கிளை விழுந்ததில், மின்கம்பம் ஒடிந்து மின்தடை ஏற்பட்டது.

ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள நூறாண்டுகளுக்கு மேலான பழைமையான கானமரம் மரக்கிளை வியாழக்கிழமை அதிகாலை சாலையில் ஒடிந்து விழுந்தது. அதில் மின்கம்பம் ஒடிந்ததில், 16 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், ஏற்காடு நகா் பகுதி, ஜெரினாகாடு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டனா். மேலும், அரசு வங்கிகள், தபால் நிலையம், தொலைத்தொடா்பு நிலையம் மின்தடையால் பாதிப்புக்குள்ளாயின. நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் சாலையில் விழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினா். அதையடுத்து, மின்உழியா்கள் மின்கம்பங்கள், உயா்மின்கம்பிகளை சீரமைத்து மாலையில் மின்விநியோகத்தை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT