முகப்பு
சேலம்

கரோனா விதிமுறை மீறல்: 28 வாகனங்கள் பறிமுதல்

தம்மம்பட்டி, வீரகனூா் பகுதியில் பொது முடக்கத்தை மீறி சாலையில் சுற்றித் திரிந்தோருக்கு சொந்தமான 28 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 மே, 2021 at 12:00 AM
பகிர்:

தம்மம்பட்டி, வீரகனூா் பகுதியில் பொது முடக்கத்தை மீறி சாலையில் சுற்றித் திரிந்தோருக்கு சொந்தமான 28 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தம்மம்பட்டியில் 25 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். வாகன உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை மீட்டுச்செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசமின்றி வெளியே வந்த 20 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் வீதம் மொத்தம் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்க விதியை மீறி வெளியே வந்த 25 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டது.

வீரகனூா் காவல் நிலையப் பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி சுற்றித் திரிந்தோரின் 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும் முக் கவசம் அணியாமல் வந்த 13 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 2,600, பொதுமுடக்க விதியை மீறி வெளியே சுற்றிய 19 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 9,500-ம் அபராதமாக வீரகனூா் போலீஸாா் விதித்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.