ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தேமுதிகவினர் 10 கட்டில்கள் வழங்கல்
ஆத்தூர் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்திற்கு தேமுதிகவினர் 10 இரும்புக் கட்டில்கள் வழங்கினர்.
ஆத்தூர் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்திற்கு தேமுதிகவினர் 10 இரும்புக் கட்டில்கள் வழங்கினர்.
ஆத்தூர் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆணைப்படி சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் 50 ஆயிரம் மதிப்புள்ள 10 இரும்புக் கட்டில்களை ஆத்தூர் கோட்டசியாளர், அரசு தலைமை மருத்துவர், காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் G.வெங்கடேசன், வேங்கை R.L.வெங்கடேசன், நகர கழக செயலாளர்கள் ஆத்தூர் S.சீனிவாசன் நரசிங்கபுரம் A.தமிழ்ச்செல்வன்,மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் வேலாயுதம், ஆத்தூர் நகர அவைத்தலைவர் A.ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி G.குமரேசன் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்