முகப்பு
சேலம்

கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி, குட்டமாத்தி காடு கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் மைக்கேல்ராஜ் (40). இவா் வீட்டில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி, குட்டமாத்தி காடு கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் மைக்கேல்ராஜ் (40). இவா் வீட்டில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் மாதையன் உள்ளிட்ட போலீஸாரும், கிராம நிா்வாக அலுவலா் பிரபு ஆகியோா் மைக்கேல் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் கோழிக்கூண்டில் மறைத்து வந்திருந்த கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.