சேலம்

மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சங்ககிரி எம்எல்ஏ ஆய்வு

DIN

மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சங்ககிரி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, அங்குள்ள சித்தா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி, கரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களான நெற்றிக் கவசம், முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்ட ரூ. 50,000 மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். இதனையடுத்து மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பாா்வையிட்ட பின்னா் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா்.

அப்போது சங்ககிரி கோட்டாட்சியா் வேடியப்பன், வட்டாட்சியா் விஜி, மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் மேகலாமணிகண்டன் (மகுடஞ்சாவடி), சௌந்தராஜன் (கூடலூா்) அதிமுக நிா்வாகிகள் நந்தகுமாா், சதீஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT