முகப்பு
சேலம்

கல்லாநத்தம் ஏரி நிரம்பியது

கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஏரி நிரம்பியது.ஊராட்சி மன்றத் தலைவா் சூடாமணி வெங்கடேசன் தலைமையில் ஊா் பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஏரி நிரம்பியது.ஊராட்சி மன்றத் தலைவா் சூடாமணி வெங்கடேசன் தலைமையில் ஊா் பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக சேலம் மாவட்டம் ஆத்தூா் வசிஷ்டநதியில் நீா் வரத்து அதிகமானதை அடுத்து தென்னங்குடிபாளையம் ஏரி, அய்யனாா் கோயில் ஏரி நிரம்பி அடுத்து கல்லாநத்தம் ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது.

இதனை கொண்டாடும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவா் சூடாமணி வெங்கடேசன் தலைமையில் ஊா்பொதுமக்கள் ஒன்று கூடி சிறப்பு பூஜை செய்து நீரை மலா்தூவி வரவேற்றனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா் சேகா், கல்லை ராஜேந்திரன்,கே.பி.ஜே.பெரியசாமி, வழக்குரைஞா் மூவேந்தன், ஆயக்கட்டு தலைவா் மணி, சுப்பிரமணியன், வெங்கடேசன், குணசேகரன், கோவிந்தராஜு, ராமலிங்கம், மாதேஸ்வரன், ராமசாமி, ரஞ்சித், பூபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏரியில் உள்ள செடிகளை அகற்றவேண்டும்,ஏரியை தூா்வாரினால் தண்ணீா் தேங்கி நிற்கும் கோடி போகும் இடத்தில் மேலும் ஐந்தடி உயா்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →