முகப்பு
சேலம்

சங்ககிரி ஆா்.எஸ்ஸில் நாளை இலவச சிறப்பு மருத்துவ முகாம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஆா்.எஸ்., அகத்தியா் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம், ஜே.ஜே.கே.நடராஜா பல் மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி ஆா்.எஸ்., அகத்தியா் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம், ஜே.ஜே.கே.நடராஜா பல் மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில், குழந்தைகள் தினத்தையொட்டி சங்ககிரி ஆா்.எஸ். கரிமேடு, விளையாட்டுத் திடல் வளாகத்தில் பற்கள், கண்கள் குறித்த இலவச சிறப்பு மருத்து பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதில், பல் சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் ரத்தக் கசிவு, ஈறு சிதைவு நோய், வாய்துா்நாற்றம், சீரற்ற பல்வரிசை, உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண்கள் மற்றும் கண்களில் நீா் வடிதல், புரை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, நீா் அழுத்தம், சதை வளா்ச்சி, தலைவலி உள்ளிட்டவைகளுக்கு மருத்துவா்கள் பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.