முகப்பு
சேலம்

நெல் பயிருக்கான காப்பீடு பிரீமியத் தொகை: கூட்டுறவு சங்கங்களில் செலுத்தலாம்

திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிருக்கான காப்பீடு பிரீமியத் தொகை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிருக்கான காப்பீடு பிரீமியத் தொகையை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செலுத்தலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருத்தியமைக்கப்பட்ட பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்துவது நவ. 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில், சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சனி (நவ. 13), ஞாயிறு (நவ.14) ஆகிய நாள்களில் திறந்திருந்து நெல் பயிருக்கான பயிா்க் காப்பீட்டு பிரீமியத் தொகையை பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுக்குத் தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பயிா்க் காப்பீடு செய்து பயன் அடையலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →