வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டுள்ள 65 அடி உயர இயேசு கிறிஸ்து திருவுருவச்சிலை 
சேலம்

புத்திரகவுண்டன்பாளையத்தில் 65 அடி உயர இயேசு கிறிஸ்து சிலை: வண்ணம் தீட்டி புதுப்பிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 அடி உயர இயேசு கிறிஸ்து சிலை, ரூ.3 லட்சம் செலவில் வண்ணம் தீட்டி உயிரோட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 அடி உயர இயேசு கிறிஸ்து சிலை, ரூ.3 லட்சம் செலவில் வண்ணம் தீட்டி உயிரோட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் 1957ஆம் ஆண்டு  புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த இக்கோவில், 2008இல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது அகற்றப்பட்டது. 

இதனையடுத்து, அப்போதைய சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால் இப்பகுதியிலேயே புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகப்பில், வாழப்பாடி தொழிலதிபர் பி.லாசர் குடும்பத்தினரின் செலவில், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 15 அடி அகல பாதம், 5 அடி அகல முக அமைப்போடு 65 அடி உயரத்தில், ரூ.20 லட்சம் செலவில் இயேசு கிறிஸ்துவின்  முழு திருவுருவ பைபர் சிலை அமைக்கப்பட்டது.

இச்சிலை 2013ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, ஆயர்  சிங்கராயனால் அர்ச்சிப்பு செய்து, வழிபாட்டிற்காக அர்பணிக்கப்பட்டது. பாதத்தில் இருந்து தலை வரை உட்புறத்தில் ஏணி அமைக்கப்பட்டுள்ளது இச்சிலையின் சிறப்பம்சமாகும். தற்போது இந்தியாவில் மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலைகளில் ஒன்றாக விளங்கி வரும் இச்சிலைக்கு, ரூ.3 லட்சம் செலவில், வண்ணம் தீட்டி உயிரோட்டமாக புதுப்பித்துள்ளனர்.  

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வான மேகங்கள் சூழ தத்ரூபமாக காட்சியளிக்கும், இந்த 65 அடி உயர இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT