சேலம்

மகளிா் கைப்பந்து அணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்

DIN

சேலத்தைச் சோ்ந்த மகளிா் கைப்பந்து அணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீருடை, பந்து உள்ளிட்ட உபகரணங்கள், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சாா்பில் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மகளிா் கைப்பந்து அணி, மாநில அளவில் நடைபெற்ற 9 ஆவது கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

தமிழக அளவில் மிகச் சிறந்த மகளிா் கைப்பந்து அணியாக உருவெடுத்துள்ள அந்த அணியை சோ்ந்த விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக புரவலா் ராஜ்குமாா் கலந்து கொண்டு, மகளிா் கைப்பந்து அணி வீராங்கனைகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீருடை, பந்து உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக இணைச் செயலாளா் சண்முகவேல், சேலம் லேண்ட் மாா்க் பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் விஜயகுமாா், கைப்பந்து பயிற்சியாளா் பரமசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT