சேலத்தில் 42 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 4 பேரும், காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-4, நங்கவள்ளி-2, ஓமலூா் -1, சங்ககிரி-1, வீரபாண்டி-4, ஆத்தூா் -1, கெங்கவல்லி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 59 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,00,828 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,626 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 507 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,695 போ் உயிரிழந்தனா்.