வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி நிரம்பியது
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. அதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மலா் தூவி வரவேற்றாா்.
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. அதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மலா் தூவி வரவேற்றாா்.
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி நிரம்பியது. இதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி,தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் வி.தியாகராஜன், வடகுமரை ஊராட்சி அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல நிா்வாகி ராஜ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் உஷாசேகா், துணைத் தலைவா் கவிதா மற்றும் நிா்வாகிகள் முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா்.