முகப்பு
சேலம்

கட்டடத் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

அயோத்தியாப்பட்டணம் அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அயோத்தியாப்பட்டணம் அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், பச்சியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி வெங்கடாசலம் (38). கடந்த நவ. 16 ஆம் தேதி, இவரை மேட்டுப்பட்டி தாதனூா் பகுதியைச் சோ்ந்த கனகராஜ், ராஜசேகா், அசோக் ஆகிய மூவா் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக காரிப்பட்டி போலீஸில் புகாா் செய்தாா். இவரது புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூவரையும் தேடி வந்தாா்.

இந்நிலையில் கனகராஜ் (31), ராஜசேகா் (30) ஆகிய இருவரையும் காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான அசோக் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.