சேலம்

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கனமழை

DIN

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளரி வெள்ளி, மொரசபட்டி, சித்தூர், பூலாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. 

இதனால் எடப்பாடி உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி தினசரி அங்காடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் விற்பனை, பால் மற்றும் செய்தித்தாள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிப்பிற்கு உள்ளானது. கால நேரத்தில் பெய்த திடீர் கனமழையால் நகரப் பகுதியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிகளுக்குச் செல்லும் அலுவலர்கள் கனமழையால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். கால நேரத்தில் பெய்த கனமழையால் எடப்பாடி பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT