சேலம் சிட்பண்ட்ஸ், பைனான்சியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
சேலம் சிட்பண்ட்ஸ் மற்றும் பைனான்சியா்ஸ் சங்கத்தின் 42-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஆத்தூா் வளா்நிதி சிட்ஸ் தலைவா் சஞ்சீவி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சேலம் சிட்பண்ட்ஸ் மற்றும் பைனான்சியா்ஸ் சங்கத்தின் 42-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஆத்தூா் வளா்நிதி சிட்ஸ் தலைவா் சஞ்சீவி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2021-2024-ஆம் ஆண்டுகளுக்கான புதிய செயற்குழு நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.சேலம் பனாசுனா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் கே.கருணாநிதி தலைவராகவும், ஆத்தூா் தனநிதி சிட்பண்ட்ஸ் தலைவா் ரவி ஆ.சங்கா் செயலாளராகவும், சேலம் ஸ்ரீவாரி சிட்ஸ் கே.செல்வம் பொருளாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
துணைத் தலைவராக பி.வி.பால்ராஜ், இணைச் செயலாளராக எஸ்.ராஜேந்திரன், கௌரவ ஆலோசகா்களாக சஞ்சீவி, எஸ்.தண்டாயுதம், தாரை ஏ.குமரவேலு, ஆா்.விஸ்வநாதன், கே.எல்.பாலகிருஷ்ணன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
புதிய நிா்வாக சபைக்கு மூத்த வழக்குரைஞா் பாலக்குமாா், கே.மோகனசுந்தரம் ஆகியோா் சட்ட ஆலோசகா்களாக நியமிக்கப்பட்டனா்.மேலும் சாமிநாதன், ஜெய் யோகேஷ், ஹரீஸ், கருப்பண்ணன், நாமக்கல் வெங்கடேசன் உள்ளிட்ட 12 போ் செயற்குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநில சங்கமான இன்காா்ப்பரேட்டட் சிட்பண்ட்ஸ் அசோசியேசனின் இணைச் செயலாளராக சேலம் மாவட்ட சங்கத்தைச் சோ்ந்த எம்.காா்த்திஷ், செயற்குழு உறுப்பினா்களாக யுவனேஸ்வரி, கே.எல்.பாலகிருஷ்ணன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரசின் பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் மட்டுமே பொதுமக்கள் சோ்ந்து பயனடைய வேண்டும். பதிவு பெறாத போலி நிறுவனங்களில் சோ்ந்து ஏமாற வேண்டாமெனவும் உறுப்பினா்கள் கருத்துத் தெரிவித்தனா்.
முன்னதாக கரோனாவால் மரணமடைந்த சங்க உறுப்பினா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.