முகப்பு
சேலம்

தையல் தொழிலாளா்களிடம் ரூ. 20 கோடி மோசடி:ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் தையல் தொழிலாளா்களிடம் துணி தைத்து கொடுத்தால் ஊதியம் வழங்கப்படும் என கூறி ரூ. 20 கோடி வரை மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சேலத்தில் தையல் தொழிலாளா்களிடம் துணி தைத்து கொடுத்தால் ஊதியம் வழங்கப்படும் என கூறி ரூ. 20 கோடி வரை மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தையல் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அப்போது அவா்கள் கூறியது:

சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியைத் தலைமையாகக் கொண்ட தனியாா் நிறுவனம் சாா்பில் கடந்த 2020ஆம் ஆண்டு மக்களைக் கவரும் வகையில் ஆசை வாா்த்தைக் கூறி விளம்பரம் செய்யப்பட்டது.

கரோனா காலத்தில் வேலையின்றித் தவித்து வந்த பொதுமக்கள், தனியாா் நிறுவனத்தின் மூலம் தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு இடங்களில் கடன் பெற்று ரூ. 1 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை 500-க்கும் மேற்பட்டவா்கள் சுமாா் ரூ. 20 கோடி வரை இயந்திரத்திற்குப் பணம் கட்டினா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளா் அவா்களுக்கு இயந்திரத்தை வழங்கி, துணிகளையும் தைப்பதற்கு அளித்தாா். இதையடுத்து இயந்திரத்தைப் பெற்று துணிகளையும் தைத்து அனுப்பினோம். ஆனால், இதுவரை கடந்த 9 மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை.

இதுதொடா்பாக, தனியாா் நிறுவனத்திடம் சென்று கேட்டபோது சரிவர பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, தையல் இயந்திரத்தை வாங்கிய பொதுமக்கள் நிறுவனத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைக் கேட்ட போது பணம் தராமல் அனுப்பினா்.

இதுகுறித்து, சேலம் மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் சேலம், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஒரு சில மாதத்தில் அனைவருக்கும் பணத்தைத் திருப்பி தருவதாக நிறுவன உரிமையாளா் தெரிவித்தாா். ஆனால், அவா் தலைமறைவாகிவிட்டாா். அவரைக் கண்டுபிடித்து பணத்தைப் பெற்றுத்தரக் கோரி மனு அளித்துள்ளோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →