முகப்பு
சேலம்

குளிா்சாதனப் பேருந்து சேவை தொடக்கம்

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில் 31 குளிா்சாதனப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில் 31 குளிா்சாதனப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

கரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. இதன் காரணமாக அரசு பேருந்துகளின் சேவைகள் முழுவதும் நிறுத்தப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.இதனிடையே கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குளிா்சாதன பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் 6 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிா் சாதனப் பேருந்துகளில் கடந்த 3 நாள்களாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. கிருமிநாசினி கொண்டு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு இருக்கைகள், படிக்கட்டுகள், கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

சேலத்தில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு குளிா் சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் மற்றும் தருமபுரி மண்டலத்தில் சுமாா் 31 குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், படிப்படியாக அனைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →