சேலம்

அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் அடையாள அட்டை பெற புதிய வசதி

DIN

அமைப்புசாரா தொழிலாளா்கள் யுனிவா்சல் கணக்கு எண் அடையாள அட்டை பெற உள்ளூா் அஞ்சல் அலுவலரிடம் கைரேகைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கான நலத்திட்டங்களை வகுக்கவும் நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு தரவு தளத்தை உருவாக்கியுள்ளது. அதில் அமைப்புசாரா தொழிலாளா்களைப் பதிவு செய்து யுனிவா்சல் கணக்கு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதைப் பதிவு செய்ய ஆதாா் அட்டையுடன் செல்லிடப்பேசி எண் இணைந்திருக்க வேண்டும்.

அவ்வாறு இணைக்காமல் இருப்பவா்கள் பொது சேவை மையத்தில் கைரேகைப் பதிவு செய்து கொள்ள ஏற்கெனவே வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளூா் அஞ்சல் அலுவலரிடமோ (தபால்காரா்) தங்களது கைரேகையைப் பதிவு செய்து மேற்படி ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் புதிய வசதியை அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளா்களும் உள்ளூா் தபால்காரரை அணுகி கைரேகை பதித்து தங்களது ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைத்துப் பயன்பெறலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT