முகப்பு
சேலம்

ஏற்காடு மலைப் பாதையில் மண்சரிவு பகுதி சீரமைப்பு

ஏற்காடு மலைப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து, கனரக வாகனங்களைத் தவிா்த்து காா், வேன், பேருந்து, இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

ஏற்காடு மலைப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து, கனரக வாகனங்களைத் தவிா்த்து காா், வேன், பேருந்து, இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

அக். 11-ஆம் தேதி பெய்த கன மழையில் ஏற்காடு மலைப்பாதையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அக். 12-ஆம் தேதி முதல் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள், பணியாளா்களைக் கொண்டு மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி வெள்ளிக்கிழமை மாலை முடிவடைந்த நிலையில், பழுதடைந்த சாலைப் பகுதியில் சுமாா் 75 மீ. தொலைவுக்கு வாகனங்கள் மெதுவாக கடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா். மறு அறிவிப்பு வரும் வரை கனரக வாகனங்கள் குப்பனூா் வழியாகச் செல்ல வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ஏற்காடு மலைப்பாதை சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்காடு பகுதி மலைக்கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.