முகப்பு
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32  அடியிலிருந்து 92.44 அடியாக உயர்ந்தது. 

Updated On : 19 அக்டோபர், 2021 at 10:12 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:54 AM


சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32  அடியிலிருந்து 92.44 அடியாக உயர்ந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழை தனிந்ததன் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,197 கன அடியிலிருந்து 16,012 கன அடியாக சற்று குறைந்து உள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு  100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.48 டிஎம்சியாக இருந்தது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.