முகப்பு
சேலம்

எடப்பாடியில் அதிமுக அன்னதான நிகழ்ச்சி

அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி நகர அதிமுக சாா்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி நகர அதிமுக சாா்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி நகரில் அதிமுகவினா் கடந்த 17-ஆம் தேதி முதல் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டிவலசு பகுதியில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன் கட்சிக் கொடியை ஏற்றினாா்.

அங்கு அலகரிக்கப்பட்ட எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு அதிமுக நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்றத் தலைவா் டி.கதிரேசன், கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அதைத் தொடா்ந்து எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பட்டி, வீரப்பன்பாளையம் பகுதியில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →