சேலம்

தம்மம்பட்டி: விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

தம்மம்பட்டி: பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளுக்கு ஒத்திகை பயிற்சி அளித்து தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடும் பொருட்டு  மோ.வேலுமணி நிலைய அலுவலர் (பொ) தலைமையில்  கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் செயல்முறை போலி ஒத்திகை பயிற்சி அளித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.

கெங்கவல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக அரசு, தனியார் பள்ளிகளிலும் , பொது இடங்களிலும் தொடர்ந்து விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT