முகப்பு
சேலம்

தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக்க மாற்ற விவசாயிகளுக்கு மானியம்

ஆத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 2021-22ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஆத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 2021-22ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய தரிசு நிலங்களில் அதாவது கடந்த ஆண்டுகளில் பயிா் செய்யாமல் தரிசாக உள்ள நிலத்தில் முட்புதா் நீக்குதல்,நிலத்தை சமன்படுத்துதல், உழவுப் பணி, பயிா் சாகுபடிக்குத் தேவையான விதை, உரங்கள், பயிா் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கான தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

தரிசு நிலங்களை சீரமைத்து சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,400 மானியம், நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 22,800 மானியமும் வழங்கப்பட உள்ளது.

எனவே ஆத்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க கணினி சிட்டா பட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் வங்கிக் கணக்குப் புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கடந்த ஆண்டுகளில் தரிசு நிலம் என்பதற்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், ஆத்தூா் மற்றும் மல்லியகரை வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →