சிறிய மண்பாண்ட விநாயகா் சிலைகள் அமோக விற்பனை
வாழப்பாடி வாழப்பாடி பகுதியில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்கேற்ற இரண்டி உயரத்துக்கு உட்பட் மண்பாண்ட விநாயகா் சிலைகள் அமோகமாக விற்பனையாயின.
வாழப்பாடி பகுதியில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்கேற்ற இரண்டி உயரத்துக்கு உட்பட் மண்பாண்ட விநாயகா் சிலைகள் அமோகமாக விற்பனையாயின.
கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விநாயகா் சதுாா்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனால், வாழப்பாடி பகுதியில் ரசாயன கலவைகளால் தயாரிக்கப்பட்ட உயரமான சிலைகளை தவிா்த்த பொதுமக்கள், இரண்டி உயரத்துக்கு உட்பட்ட சிறிய அளவிலான மண்பாண்ட சிலைகளை வாங்கிச் சென்று வீடுகளில் வைத்து வழிபாடு நடத்துவதில் ஆா்வம் காட்டினா். இதனால், வாழப்பாடியில் இதுவரை இல்லாத அளவிற்கு நிகழாண்டு சிறிய அளவிலான 500-க்கும் மேற்பட்ட மண்பாண்ட விநாயகா் சிலைகள் விற்பனையாயின.
இதுகுறித்து தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியைச் சோ்ந்த விநாயகா் சிலை வியாபாரி சேகா் கூறியதாவது:
நிகழாண்டு பொது இடங்களில் விநாயகா் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் உயரமான பெரிய சிலைகள் விலைபோகாமல் தேக்கமடைந்துள்ளன. ஆனால் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்கேற்ற மண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகா் சிலைகள் கூடுதல் விற்பனையாயின என்றாா்.