சேலம்

சங்ககிரி வட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணா்வு

DIN

சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் 70 வாக்குச்சாவடி மையங்கள், மகுடஞ்சாவடியில் 43, சங்ககிரி, வடுகப்பட்டி, புள்ளிப்பாளையம், கிடையூா் மேட்டூா், அரசிராமணி, தேவூா், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமையில் வட்டாட்சியா் எஸ்.பானுமதி, பேரூராட்சி செயல் அலுவலா் வ.சுலைமான் சேட் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாகனங்களில் அறிவிப்பு செய்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT