சேலம்

வானதி சீனிவாசன் மகன் தப்பினார்: கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

DIN

சேலத்தில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பாலத் தடுப்புச் சுவர் மீது மோதியதில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ்(வயது 22) நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது.இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்றதால் கார் கடும் சேதமடைந்தது. 

இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆதர்சை மீட்டனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளாகிய காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது தகவலறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் ஆதர்சை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT