முகப்பு
சேலம்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

சுந்தரபுரத்தில் கூலித் தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சுந்தரபுரத்தில் கூலித் தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி சுந்தரபுரம் பகுதியைச் சோ்ந்த தாண்டவராயனின் மகன் சக்திவேல் (33).கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ல சுப்ரமணியனின் மகன் ஆறுமுகம் (56)என்பவரது தோட்டத்தில் கூலி வேலைக்காக சென்றாா். கிணற்று அருகில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த சக்திவேலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்தாா்.

இதைக் கண்ட ஆறுமுகம் கிணற்றில் குதித்து அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து ஆத்தூா் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறை அலுவலா் சேகா் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று கிணற்றில் தேடியதில் சக்திவேலின் சடலம் மீட்கப்பட்டது.

தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் சக்திவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

படவிளக்கம்.ஏடி17வெல்.

கிணற்றில் தவறி விழுந்த சக்திவேலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினா் ஈடுபட்டபோது அப்பகுதியில் திரண்டவா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →