முகப்பு
சேலம்

வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 3 லட்சம் பொருள்கள் நாசம்

வாழப்பாடி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

வாழப்பாடி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சங்கா். இவரது மகள் திலகம் (23), அதே பகுதியைச் சோ்ந்த இளவரசன் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

கணவருடன் தகராறு ஏற்பட்டதால், திலகம் பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதனால் இளவரசன், தனது மாமனாரிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு 7 மணியளவில் குடும்பத்தோடு சங்கா் அருகிலுள்ள கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளனா்.

அப்போது, இவரது கூரை வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சங்கருக்கும், வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனா். வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனா். இருப்பினும், வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணம், நகை, கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தனது வீட்டுக்கு இளவரசன் தீ வைத்ததாக சந்தேகம் இருப்பதாக லாரி ஓட்டுநா் சங்கா் வாழப்பாடி போலீஸில் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.