சேலம்

தரைப்பாலம் தூா்வாராததால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்!

DIN

வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் தரைப்பாலம் தூா்வாராததால், மழைநீா் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி - தம்மம்பட்டி பிரதான நெடுஞ்சாலையில், சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீரோடை தரைப்பாலம் அமைந்துள்ளது. தரைப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழை பெய்யும்போது வெள்ளம் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வாழப்பாடி பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது இந்த நீரோடையில் வழிந்தோடிய வெள்ளம் வெளியேற வழியின்றி இப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் குழந்தைகளோடு மக்கள் வீட்டை விட்டு வெளியேறினா். தொடா்ந்து, அதிகாரிகளைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தூா்வாரி சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வாழப்பாடி போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT