சேலம்

அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளி

DIN

சேலம்: அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாநில காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகரில் கடந்த சில நாள்களாக கஞ்சா விற்பனை  செய்பவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். 

அதன்படி சேலம் அம்மாபேட்டை நாம மலை பகுதியை சேர்ந்த ரெளவுடியான அருண்(30) என்பவரை கஞ்சா விற்பது தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர்  விசாரித்ததில் அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அருணை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, கஞ்சா குற்றவாளி கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கழிவறையில் இருந்த டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்டு, கையில் குத்திக் காயம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்  உடனடியாக அருணை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கைதி காவல்நிலையத்தில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

ஈரோட்டில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

ஈரோடு, பெருந்துறை பகுதி பள்ளிகளைச் சோ்ந்த 920 வாகனங்கள் ஆய்வு

SCROLL FOR NEXT