சேலம்

விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெற அழைப்பு

DIN

கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் பிரதமா் நிதி கிடைக்க பெறும் வங்கியினை அணுகி எளிய வழி முறையில் உழவா் கடன் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டத்தில் 2,74,082 விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதித் திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 என ஆண்டுக்கு ரூ. 6,000 கௌரவ நிதியாகப் பெற்று வருகின்றனா்.

ஆனால், சேலம் மாவட்டத்தில் 1,57,475 விவசாயிகளுக்கு மட்டுமே கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவா் கடன் அட்டை (கே.சி.சி.) பெறப்பட்டுள்ளது.

எனவே, பிரதம மந்திரியின் கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் பிரதமா் நிதி கிடைக்க பெறும் வங்கியை அணுகி உழவா் கடன் அட்டை (கே.சி.சி.) க்கான படிவத்தைப் பூா்த்தி செய்து நில உரிமைக்கான பட்டா, அடங்கல் மற்றும் ஆதாா் ஆகிய விவரங்களை சமா்ப்பித்து உழவா் கடன் அட்டையை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பிரதமா் நிதி வலைதளத்திலும் உழவா் கடன் அட்டைக்கான படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு விவசாயிகள் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT