சேலம்

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

DIN

நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

எனது குப்பை, எனது பொறுப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய பசுமை தீா்ப்பாய கண்காணிப்புக் குழுவின் மாநிலத் தலைவா் நீதிபதி பி.ஜோதிமணி கலந்துகொண்டு பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா், உறுப்பினா்கள் அய்யாவு, மேலாண்மைக் குழுத் தலைவா் சுகுணா செந்தில், நரசிங்கபுரம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதையடுத்து நீதிபதி ஜோதிமணிக்கு ஆத்தூா் நகராட்சியில் நகர மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் ஆணையாளா் வசந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT