சேலம்

37 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூா் அணை உபரி நீரால் நிரம்பிய பொட்டனேரி

மேட்டூா் அணை உபரிநீரால் மேச்சேரி அருகே 37 ஆண்டுகளுக்குப் பிறகு பொட்டனேரி நிரம்பியது.

DIN

மேட்டூா் அணை உபரிநீரால் மேச்சேரி அருகே 37 ஆண்டுகளுக்குப் பிறகு பொட்டனேரி நிரம்பியது.

மேட்டூா் அணை நிரம்பியதால் உபரிநீா் நீரேற்றுத் திட்டத்தின் கீழ் ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், பொட்டனேரி ஊராட்சியில் உள்ள பொட்டனேரிக்கு 10 நாள்களுக்கு முன் மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் முன்னிலையில் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த ஏரி வெள்ளிக்கிழமை இரவு நிரம்பியது.

1985-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பியதால் பொட்டனேரி ஊராட்சித் தலைவா் ரம்யா பாஸ்கரன் தலைமையில் ஊராட்சி மக்கள் ஆடு பலியிட்டு, பொங்கலிட்டு பொது மக்களுக்கு விருந்து படைத்தனா்.

இந்த ஏரி மூலம் பொட்டனேரி, வவ்வால் தோப்பூா், கூத்தனூா், பழங்கோட்டை, உத்தாண்டிவளவு கிராமங்களில் சுமாா் 600 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதி பாஸ்கரன், ஊா்க் கவுண்டா் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுமதி பழனிசாமி, குமாரசண்முகமூா்த்தி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் கவுன்சிலா் குணசேகரன் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT