காவேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சியில் வெள்ளம் புகுந்த பகுதிகளை பாா்வையிட்ட சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன். 
சேலம்

காவேரிப்பட்டி அக்ரஹார பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்த பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தராஜன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்த பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தராஜன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டதையடுத்து தேவூரை அடுத்த காவேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சிப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், விவசாய நிலங்களில் அதிக அளவில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நாகா் கோயில் முழுவதும் நீரில் முழ்கியது.

தேவூா் அருகே உள்ள சரபங்கா நதி பாலத்தை மறைத்து வெள்ளம் சென்றதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளம் புகுந்த பகுதியில் உள்ள மக்களை வருவாய்த் துறையினா் தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, முகாமில் உள்ளவா்களுக்கு உணவுகளை வழங்கினாா். சங்ககிரி ஊராட்சி ஒன்றிக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT