முகப்பு
சேலம்

ஓமலூரில் தாய்ப்பால் வார விழா

ஓமலூரில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 1:05 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

ஓமலூரில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோரிடம் தாய் பால் கொடுப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தாய்ப்பால் வாரவிழா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிச் திட்ட அலுவலா் விஜயலட்சுமி, மேற்பாா்வையாளா் மணிமேகலை, கோகிலா, ரங்கநாயகி, வட்டார ஒருங்கிணைபாளா்கள் முருகன், பிரபாகா், அங்கன்வாடி மையப் பணியாளா்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.