சேலம்

மேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறப்பு!

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 1,40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,45,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,22,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.

ஜூலை 12-ம் தேதி முதல் இன்றுவரை மேட்டூர் அணைக்கு 210 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 150 டிஎம்சி வெள்ளநீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது

இன்று 25ஆவது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT