சேலம்

வாழப்பாடியில் புனித பத்தாம் பத்திநாதர் 64-வது தேர் பவனித் திருவிழா

DIN

வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், நேற்று 64-வது தேர் பவனித் திருவிழா சனிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பிரசித்திபெற்ற பத்தாம் பத்திநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் தேர்பவனித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு 64-வது ஆண்டு தேர் பவனித் திருவிழா மற்றும் சிறப்பு திருப்பலி பூஜை வழிபாடு, சேலம் மறை மாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தலைமையில் நடைபெற்றது.

மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி தேர் பவனி ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

இதனைத்தொடர்ந்து, புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3  திருத்தேர் பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT