முகப்பு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8000 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 கனஅடியாகவும் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →