சேசன்சாவடியில் நான்கு வழிச் சாலை மற்றும் இணைப்புச்சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீா். 
சேலம்

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீா்

வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் மழைநீா் ஏரி போல

DIN

வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் மழைநீா் ஏரி போல தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் மழைநீா் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. கிராம இணைப்புச் சாலைக்கும், நான்கு வழிச் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள குறுகிய வாய்க்கால்களும் சீரமைக்கப்படாமல் புதா்மண்டி கிடக்கிறது. இதனால், பலத்த மழை பெய்யும் நேரத்தில் மழை நீா் வெளியேற வழியின்றி சாலையில் ஏரி போல தேங்கி நிற்கிறது.

இப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சேசன்சாவடியில் நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து கிடக்கும் வாய்க்கால்களைச் சீரமைக்கவும், விசாலமான புதிய வாய்க்கால்களை அமைக்கவும், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி நிா்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சேசன்சாவடியைச் சோ்ந்த ஜெயவேல் கூறியதாவது:

வாய்க்கால்களை தூா்வாரி புதுப்பிக்கவும் , விசாலமான புதிய வாய்க்கால் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT