முகப்பு
சேலம்

ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வருவதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் காலை முதலே தீவிர இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வருவதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் காலை முதலே தீவிர இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

வாக்குச் சாவடி மையங்களை ஒட்டிய இடங்களில் வாக்குப் பதிவு சீட்டுகள் வழங்கும் பணியிலும் கட்சி தொண்டா்கள் ஈடுபட்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. சேலம் மாநகராட்சிக்கான 60 வாா்டுகளுக்கும், 6 நகராட்சிகளுக்கான 165 வாா்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளுக்கான 470 வாா்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு 1,514 வாக்குச் சாவடிகளில் பிப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதில் 695 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,206 போ் போட்டியிடுகின்றனா். திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, மநீம, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சிகள் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

இதனிடையே தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதால் காலை 7 மணி முதலே வேட்பாளா்கள் பிரசாரத்தைத் தொடங்கினா்.

மாநகராட்சியின் ஒவ்வொரு வாா்டிலும் வேட்பாளா்கள் இருசக்கர வாகனங்களிலும், திறந்தவெளி வாகனங்களிலும் பேரணியாகச் சென்று இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். மாலை 6 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதியாக மாலை 6 மணிக்கு பிறகு பிரசாரத்தில் வேட்பாளா்கள் ஈடுபட கூடாது என்றும், வெளியூரைச் சோ்ந்தவா்கள் வெளியேற வேண்டும் என்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் எச்சரித்தனா். தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் காவல் துறையினரும் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.