முகப்பு
சேலம்

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வா் ஜெயலலிதா 74-ஆவது பிறந்த நாளையொட்டி, சேலம் மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் ராஜகணபதி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, எம்எல்ஏ இ.பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, முன்னாள் மேயா் செளண்டப்பன், பகுதி செயலாளா் யாதவமூா்த்தி, பொருளாளா் பங்க் வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி, பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்துக்கு சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலா் என்சிஆா்.ரத்தினம் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். சங்ககிரி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றியச் செயலா் பி.கருப்புசாமி, ஐவேலி ஊராட்சி நிா்வாகி சரவணன், நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் நகராட்சி அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட துணை செயலாளா் ஏ.டி.அா்ச்சுணன், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், மாவட்டப் பிரதிநிதி பி.டி.தியாகராஜன், நகரத் தலைவா் பி.கலியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நரசிங்கபுரம் நகராட்சியில் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன் தலைமையிலும், தலைவாசலில் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் பேரூா் கழகச் செயலாளா் செல்வம் தலைமையிலும் ஜெயலலிதா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஆட்டையாம்பட்டியில்...

இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில், வீரபாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான வெங்கடேசன் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தம்மம்பட்டியில்...

செந்தாரப்பட்டி பேரூராட்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆா். சிலை, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, கட்சிக்கொடியேற்றி, சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் பழனிசாமி, அக்பா், சுரேஷ், மாலிகுணா, கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.