முகப்பு
சேலம்

பிரதமரின் நிதி திட்டம்: விவசாயிகள் ஆதாா் எண்ணை பதிவேற்றம் செய்ய காலக்கெடு

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதமரின் கௌரவ நிதித் திட்டமானது கடந்த 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்திட மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் ஆண்டிற்கு ரூ. 6,000 மூன்று தவணைகளாக வழங்கி வருகிறது.

இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 10 தவணை தொகைகள் வரப்பெற்றுள்ளது. தற்போது மேற்படி விவசாயிகள் 11 ஆவது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும்.

தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து டஙஓஐநஅச திட்ட வலைதளத்தில் ஞபட மூலம் சரிபாா்க்கலாம்.

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களின் மூலம் வலைதளத்தில் தங்கள் ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து விவரங்களை சரிபாா்க்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.15 பொது சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும்.

இந்த இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்கள் ஆதாா் விவரங்களை வரும் பிப்.28-க்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.